செய்திகள்

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர் ராவ் இன்று சந்திப்பு

Published On 2018-03-19 01:20 GMT   |   Update On 2018-03-19 01:20 GMT
பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கி பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மம்தாவுடன் சந்திரசேகர ராவ் இன்று கொல்கத்தாவில் ஆலோசனை நடத்துகிறார்.
ஐதராபாத்:

இந்தியாவை வளர்ச்சியடைய செய்ய பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என கூறி வரும் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.

இது தொடர்பாக மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்த அவர் முடிவு செய்து உள்ளார். இதற்காக இன்று (திங்கட்கிழமை) சந்திரசேகர் ராவ் மேற்குவங்காளம் செல்கிறார். அங்கு தலைநகர் கொல்கத்தாவில் மாலை 4 மணியளவில் அவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார்.

இந்த தகவலை தெலுங்கானா முதல்-மந்திரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என சந்திரசேகர் ராவ் அறிவித்த உடனேயே, அவரை மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News