செய்திகள்

கேரளாவில் மனித இரத்தத்தால் காளி சிலையை அபிஷேகம் செய்யும் சடங்கிற்கு தடை

Published On 2018-03-07 14:55 GMT   |   Update On 2018-03-07 14:55 GMT
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாடட்டத்தில் உள்ள கோவிலில் மனித இரத்தத்தால் காளி சிலைக்கு அபிஷேகம் செய்யும் சடங்கிற்கு அறநிலையத்துறை இன்று தடை விதித்துள்ளது. #Kerala
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விதுரா என்ற பகுதியில் தேவியோடு ஸ்ரீவிதாவுரி வைத்யனாதா கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள காளி சிலைக்கு மனித இரத்தத்தால் அபிஷேகம் நடத்த மக்கள் இரத்த தானம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், இந்த சடங்கை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோவிலில் குதியோத்தம் என்ற பெயரில் சிறுவர்களின் முதுகில் கம்பியால் குத்தும் சடங்கிற்கும் கடகம்பள்ளி சுரேந்திரன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Kerala #TamilNews
Tags:    

Similar News