செய்திகள்

சட்டசபை ரகளை வழக்குகள் - கேரள அரசின் முடிவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு

Published On 2018-02-27 11:03 GMT   |   Update On 2018-02-27 11:03 GMT
கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் சட்டசபையில் ரகளை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 6 இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை வாபஸ் பெற தற்போதைய அரசு முடிவெடுத்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நிதிமந்திரி கே.எம். மாணி பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆனால், அவர் மீது ஊழல் வழக்குகள் இருப்பதால் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என அப்போது எதிர்க்கட்சியாக இருந்த இடதுசாரி உறுப்பினர்கள் சட்டசபையில் ரகளையில் ஈடுபட்டனர்.

அன்று சட்டசபையில் நடந்த சம்பவங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 6 இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தன் மீதான வழக்கு அரசியல் காரணங்களுக்காக பதியப்பட்டது. எனவே, அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ சிவன் குட்டி, முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சபாநாயகரிடம் கடிதம் அளித்திருந்தார்.

இதனை அடுத்து, மேற்கண்ட வழக்குகளை வாபஸ் பெற அரசு முடிவு செய்ததாக தகவல்கள் வெளியானது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. #KeralaAssembly #TamilNews
Tags:    

Similar News