செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் முன்னேறியுள்ளது - ராஜ்நாத் சிங் பாராட்டு

Published On 2018-02-21 22:25 GMT   |   Update On 2018-02-21 22:25 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் முன்னேறியுள்ளது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் முன்னேறியுள்ளது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் நோக்கிலும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கிலும் முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, லக்னோ நகரில் நேற்று தொடங்கிய மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மாநில கவர்னர் ராம்நாயக், முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் மற்றும் மந்திரிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

இதில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசுகையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் முன்னேறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடைசி 10 மாத காலத்தில் மிகவும் சிறப்பான முறையில் சட்டம் ஒழுங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. இதையடுத்து, முதலீட்டாளர்கள் தங்கள் பார்வையை உ.பி.யை நோக்கி திருப்பியுள்ளனர்.

மாநிலத்தில் குற்றங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ள மாநில அரசுக்கு பாராட்டுக்கள். எனவே, முதலீட்டாளர்கள் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கண்டிப்பாக பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News