செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - பா.ஜ.க. பின்னடைவு

Published On 2018-02-19 14:22 GMT   |   Update On 2018-02-19 14:22 GMT
குஜராத் மாநிலத்தில் உள்ள 74 நகராட்சிகளுக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்பைவிட கூடுதலாக வெற்றி பெற்றுள்ள நிலையில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. #Gujaratcivicpolls #bjp
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் உள்ள 74 நகராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு கடந்த 17-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படு இன்று மாலை முடிவுகள் வெளியாகின.

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வட்நகர் நகராட்சிக்குபட்ட ஏழு வார்டுகளுக்குள் வரும் 28 உறுப்பினர்களுக்கான போட்டியில் பா.ஜ.க. 27 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், கடந்த முறை 59 நகராட்சி இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க. இந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது, பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதேவேளையில், கடந்த தேர்தலில் வெறும் 12 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் இந்த முறை 16-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று ஏறுமுகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews  #Gujaratcivicpolls #bjp
Tags:    

Similar News