செய்திகள்

பா.ஜ.க புதிய தலைமை அலுவலகம் - பிரதமர் மோடி, அமித் ஷா திறந்து வைத்தனர்

Published On 2018-02-18 06:45 GMT   |   Update On 2018-02-18 06:45 GMT
டெல்லியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க புதிய தலைமை அலுவலகத்தை பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித்ஷா ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். #BJP
புதுடெல்லி:

டெல்லி அசோக் சாலையில் பா.ஜ.க.வின் தலைமை அலுவலகம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இடப்பற்றாக்குறை மற்றும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அக்கட்சிக்கு புதிய தலைமை அலுவலகம் கட்ட கடந்தாண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

தீன்தயால் உபாத்தியா மார்க்கில் நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை பிரதமர் மோடி, அக்கட்சித்தலைவர் அமித்ஷா ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழுவதும் வைபை வசதிகளை கொண்ட இந்த கட்டிடம் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நூலகம், வீடியோ கான்பிரென்சிங், கூட்ட அரங்குகள், தங்கும் விடுதி என பல வசதிகளை இக்கட்டிடம் கொண்டுள்ளது.  #BJP #TamilNews
Tags:    

Similar News