search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறந்து வைப்பு"

    • விருதுநகர் சூலக்கரையில் பகுதி நேர நியாயவிலை கடைைய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
    • 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் கூட்டுறவுத்துறை மூலம் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேசன் பொருட்களையும், 3 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டிகளையும் வழங்கினார்.

    பின்பு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 725 முழு நேர நியாய விலை கடைகளும், 270 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் இயங்கி வருகின்றன. மேலும் 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன.

    விருதுநகர் மாவட்டத்தில் 6 லட்சத்து 10 ஆயிரத்து 845 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6 லட்சத்து 248 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் சூலக்கரை பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, பகுதி நேர நியாயவிலைக் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கடையின் மூலம் 310 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, அருப்புக்கோட்டை யூனியன் தலைவர் சசிகலா, வட்டாட்சியர் அறிவழகன், வட்ட வழங்கல் அலுவலர் ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×