செய்திகள்

சட்ட விரோத பணபரிமாற்றம் - குஜராத் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் அமலாக்க துறை சோதனை

Published On 2018-02-15 06:26 GMT   |   Update On 2018-02-15 06:26 GMT
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் நீரவ் மோடி, சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக, மும்பையில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் அமலாக்க துறை இன்று சோதனை நடத்தியது. #pnbbankfraudcase #niravmodi
புதுடெல்லி:

குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார்.

இதற்கிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் நேற்று இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டது.

முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாய் முறைகேடாக கடன் பெற்றதாக கூறி ஏற்கனவே அவர் மீது கடந்த மாதம் 29-ம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 31-ம் தேதி அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இந்நிலையில், தொழிலதிபர் நீரவ் மோடி, சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக மும்பையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்க துறை இன்று சோதனை நடத்தியது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சோதனை நடத்தியபோது நீரவ் மோடி வீட்டில் இல்லை. இதேபோல் வேறு பல வங்கி கிளைகளில் மோசடி செய்துள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.
#pnbbankfraudcase #niravmodi #tamilNews
Tags:    

Similar News