செய்திகள்
கோப்பு படம்

வழக்கத்திற்கு மாறாக ராமர் நாடகத்துடன் தொடங்கும் ‘தாஜ் மஹோத்சவ்’ விழா

Published On 2018-02-05 08:59 GMT   |   Update On 2018-02-05 08:59 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் கலாச்சார விழாவான தாஜ் மஹோத்சவ்வில் முதன் முறையாக ராமரின் நாடகம் நடத்தப்பட இருக்கிறது.
லக்னோ:

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா நகரில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ‘தாஜ் மஹோத்சவ்’ என்ற பெயரில் கலாச்சார நிகழ்ச்சி நடைபெறும். இந்திய சுற்றுலாத் துறை நிதியுதவியுடன், உத்தரப்பிரதேச மாநில சுற்றுலாத் துறை இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது.

10 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில் மொகலாயர்கள் காலத்து கலாச்சார இசையான சூஃபி பாடல்களுடன் இந்திய கலை, கலாச்சாரம், நடனம் ஆகியவை அரங்கேற்றப்படும். ஆனால், இம்முறை முதன்முறையாக ராமரின் வாழ்க்கை வரலாறு நடன நிகழ்ச்சியாக அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது.

பிப்ரவரி 18-ம் ஆண்டு தொடங்க உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு மாநில கவர்னர் ராம் நாயக் மற்றும் முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் கலந்து கொள்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 
Tags:    

Similar News