செய்திகள்

ஆதார் அட்டையை கண்காணிப்பு கருவியாக பயன்படுத்தி வருகிறது - மத்திய அரசு மீது, காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2018-01-07 21:39 GMT   |   Update On 2018-01-07 21:39 GMT
ஆதார் அட்டையை கண்காணிப்பு கருவியாக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷோபா ஓசா குற்றம் சாட்டி உள்ளார். #AadharCard #Shobha Oza #Congress
புதுடெல்லி:

அரசின் நலதிட்டங்களை பெற ஆதார் அட்டை கட்டாயம் வேண்டும் என கூறி வரும் மத்திய அரசு, வங்கி கணக்கு, பான்கார்டு, செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஆதார் அட்டையை கண்காணிப்பு கருவியாக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷோபா ஓசா குற்றம் சாட்டி உள்ளார்.



டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர் இது குறித்து கூறுகையில், “தற்போது பிரதமராக இருக்கும் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ‘ஆதார் அட்டையால் எந்த பயனும் இல்லை. அது வெறும் அரசியல் வித்தை’ என்று கருத்து தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அவரது தலைமையிலான மத்திய அரசு தான் எல்லாவற்றுடனும் ஆதாரை இணைக்க சொல்லி வற்புறுத்துகிறது” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு தனது குறைகளை திருத்திக்கொள்ளாமல் சர்வாதிகார மனபோக்குடன் செயல்படுவதோடு, அடக்குமுறை பாணியை கையாளுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். #AadharCard #Shobha Oza #Congress #tamilnews 
Tags:    

Similar News