செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உ.பி. மற்றும் ம.பி. மாநிலத்திற்கு பயணம்

Published On 2018-01-07 18:45 GMT   |   Update On 2018-01-07 18:45 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒருநாள் பயணமாக உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் மாநிலத்திற்கு செல்கிறார். #RamnathGovind #UPvisit #MPvisit
புதுடெல்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒருநாள் பயணமாக உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் மாநிலத்திற்கு செல்கிறார்.

புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அலகாபாத் விமானநிலையம் சென்றடையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சித்தர்கோட் செல்கிறார். அங்கு ஒரு தனியார் பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சத்குரு ரம்பத்ரசாரியா பல்கலைகழகத்தில் நடைபெறும் இந்த விழாவில், பட்டப்படிப்பு முடித்த 579 மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்குகிறார்.

அதன்பின் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்திற்கு செல்லும் ஜனாதிபதி அங்குள்ள தீன்தயால் ஆய்வு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை பார்வையிடுகிறார். அதைத்தொடர்ந்து அன்று இரவு டெல்லி திரும்புவார் என ஜனாதிபதி மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகையையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #RamnathGovind #UPvisit #MPvisit #tamilnews
Tags:    

Similar News