search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ramnath govind"

    • பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • இந்திய ஜனாதிபதியாக அவர் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதில் அதிக முக்கியத்துவம் அளித்தார்.

    முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது அரசாட்சி மற்றும் தலைமைத்துவத்திற்காக அவர் மதிக்கப்படுகிறார். இந்திய ஜனாதிபதியாக அவர் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதில் அதிக முக்கியத்துவம் அளித்தார். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமாக வாழட்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    • நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன்.
    • எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்றுடன் பதவியில் இருந்து ஓய்வுப்பெறும் நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    5 வருடங்களுக்கு முன்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஜனாதிபதியாக எனது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. உங்களுக்கும் உங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் பாரௌன்க் கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் வளர்ந்த ராம்நாத் கோவிந்த், இன்று நாட்டு மக்களாகிய உங்கள் அனைவருக்கும் உரையாற்றுகிறேன். இதற்காக, நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன்.

    ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எனது சொந்த கிராமத்திற்குச் சென்றதும், எனது கான்பூர் பள்ளியில் உள்ள வயதான ஆசிரியர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுவதும் என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இருக்கும்.

    நமது வேர்களோடு இணைந்திருப்பது இந்திய கலாச்சாரத்தின் சிறப்பு. இளைய தலைமுறையினர் தங்கள் கிராமம் அல்லது நகரம் மற்றும் அவர்களின் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்திருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடர நான் கேட்டுக்கொள்கிறேன்.

    எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்.

    நமது இயற்கை ஆழ்ந்த வேதனையில் உள்ளது. காலநிலை நெருக்கடி இந்த கிரகத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். நமது குழந்தைகளின் நலனுக்காக நமது சுற்றுச்சூழல், நிலம், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    நமது அன்றாட வாழ்க்கையில் மரங்கள், ஆறுகள், கடல்கள், மலைகள் மற்றும் மற்ற அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதல் குடிமகனாக, சக குடிமக்களுக்கு நான் ஒரு அறிவுரை கூற வேண்டும் என்றால், அது இதுவாகதான் இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 16வது மக்களவையினை கலைக்க உத்தரவிட்டார்.
    டெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதன் பின்னர்  தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு மோடியை கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் 16வது மக்களவையை கலைக்குமாறு மத்திய அமைச்சரவை அளித்த தீர்மானத்தை ஏற்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 16வது மக்களவையை கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 
    மக்களவையின் முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு வங்காளதேச மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். #SomnathChatterjee #RamNathKovind
    புதுடெல்லி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 89 வயதான இவர் இன்று காலை 8.15 மணியளவில் இயற்கை எய்தினார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்தவர் என்பதும், 10 முறை எம்.பியாக இருந்த சிறப்புக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மிக மூத்த அரசியல் தலைவர்களின் ஒருவரான இவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், வங்காள தேசம் மற்றும் இந்திய மக்களுக்கான பேரிழப்பாக அவரது பிரிவு அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



    இவரைத் தொடர்ந்து துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, தெலுங்கானா மாநில முதல்மந்திரி சந்திரசேகர் ராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மேற்கு வங்காள மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் மாநில முதல்மந்திரி நிதிஷ் குமார், உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். #SomnathChatterjee #RamNathKovind
    தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #RIPKalaignar
    புதுடெல்லி:

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில் இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி மிகவும் சோகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும்,  மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்பதாக குறிப்பிட்டுள்ளார். #RIPKalaignar
    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை முதல் 2 நாள் அரசு முறை பயணமாக கோவா செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamNathGovind #Goa
    புதுடெல்லி:

    கோவா மாநில பல்கலைகழகத்தின் 30-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை கோவா செல்ல உள்ளார்.

    பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அடுத்து, மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும், ஞாயிற்று கிழமை பாம் ஜீசஸ் தேவாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamNathGovind #Goa
    ×