செய்திகள்

உ.பி.: மனைவிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் விவாகரத்து கொடுத்த கணவர்

Published On 2018-01-06 15:59 GMT   |   Update On 2018-01-06 15:59 GMT
சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் ஒருவர் தனது மனைவிக்கு எஸ்.எம்.எஸ் மூலம் விவாகரத்து கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த ஒருவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு எஸ்எம்எஸ் மூலம் தலாக் ( விவாகரத்து) அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், என் மாமியார் வீட்டினர் என்னிடம் வாகனம் கேட்டு தொல்லை கொடுத்தனர். என் கணவரும் என்னை கொடுமைப்படுத்தினார்.

இதற்கிடையே, என் கணவரிடம் இருந்து எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். தகவல் வந்துள்ளது. அதில் அவர் எனக்கு விவாகரத்து கொடுத்துள்ளார். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். நாங்கள் வாழவேண்டும். இது என்னுடைய வீடு. நான் இங்கிருந்து விலகி செல்லமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் தந்தை கூறுகையில், திருமணமாகி 2 வருடங்கள் நன்றாக சென்றது. பின்னர் அவர்கள் என் மகளை கொடுமைப்படுத்த தொடங்கினர். அவளுடைய மாமியார் என் மகளை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். ஒரு நாள் எஸ்.எம்.எஸ் மூலம் என் மகள் கணவர் விவாகரத்து செய்துள்ளார். நாங்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை என்றார்.

முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் ஆறு மாதம் தடை விதித்துள்ள நிலையில், எஸ்.எம்.எஸ். மூலம் தலாக் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News