செய்திகள்

மூன்றரை ஆண்டு தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு: லாலு மகன் தேஜஸ்வி பேட்டி

Published On 2018-01-06 12:27 GMT   |   Update On 2018-01-06 12:27 GMT
கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலுவுக்கு இன்று மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
ராஞ்சி:

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் சிலர் மீது ரூ.89.27 லட்சம் கால்நடை தீவன ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் உள்பட 16 பேர் குற்றவாளி என 23-12-2017 அன்று தீர்ப்பளித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி சிவபால் சிங் இன்று மாலை 4 மணியளவில் சுமார் 2400 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பின்போது சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பிரன்சிங் வழியாக லாலு பிரசாத் யாதவும் கோர்ட்டில் ஆஜரானார். 

முதல் குற்றவாளி லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் இரு வழக்குகளில் தலா 5 லட்சம் வீதம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். 

இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என லாலுவின் மகனும் பீகார் மாநில முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், தீர்ப்பு நகலை படித்து பார்த்த பின்னர் லாலுவை ஜாமினில் விடுவிக்க மனு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். #tamilnews #LaluPrasadsconviction #TejashwiYadav
Tags:    

Similar News