search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேஜஸ்வி யாதவ்"

    • பீகாரில் பா.ஜனதா, நிதிஷ் குமார் கட்சி, சிராக் பஸ்வான் கட்சி இணைந்து போட்டியிடுகின்றன.
    • காங்கிரஸ், லாலு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ளன.

    பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் பாட்டினாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரங்களில் எப்போதுமே வாரிசு அரசியல் குறித்து பேசுவார். ஆனால், பீகாரில் அவரது முதல் தேர்தல் பிரசாரம், அவரது பேரணி வாரிசு அரசியல்வாதிக்காகவே அமைந்தது. இது மோடி சொல்வது என்ன? அதை எப்படி செயல்படுத்துகிறார் என்ற வேறுபாட்டை காட்டுகிறது" என்றார்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது திமுக, காங்கிரஸ் மற்றும் லாலு கட்சி ஆகியவற்றை குடும்ப அரசியல் என கடுமையாக விமர்சனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

    பீகாரில் பா.ஜனதா, நிதிஷ் குமார் கட்சி, சிராக் பஸ்வான் கட்சி இணைந்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ், லாலு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ளன.

    கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 40 இடங்களில் 39-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன்.
    • நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரூ.21,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்றுப் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

    நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதல் மந்திரியாக பதவி வகிக்கும் நிதிஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை கூட்டணி மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நிதிஷ்குமார் கருத்துக்கு ராஷ்டிரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நிதிஷ்குமாருக்கு நல்வாழ்த்துக்கள். இந்த முறை தான் இருக்கும் இடத்திலேயே இருப்பேன் என்றார். குறைந்தபட்சம் இந்த முறையாவது அவர் சொன்ன வார்த்தையில் உறுதியாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.

    • 10 நாள் யாத்திரையில் 38 மாவட்டங்களில் ஆதரவு திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.
    • 32 பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தயாராகி வருகிறது. இரு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு இன்னமும் முடிவடையாத நிலையில் லாலு பிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். 10 நாட்கள் நடக்கும் அவரது யாத்திரை 29-ந்தேதி நிறைவு பெற உள்ளது. இந்த 10 நாள் யாத்திரையில் 38 மாவட்டங்களில் ஆதரவு திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார். 32 பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி நடை பயணம் இன்றுடன் முடிவடைகிறது.
    • ராகுல் காந்தி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவும் கலந்து கொள்கிறார்.

    ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மெற்கொண்டு வருகிறார். தற்போது பீகார் மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த சில தினங்களாக அவர் நடை பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்றுடன் பீகார் மாநிலத்தில் அவருடைய நடை பயணம் முடிவடைகிறது. இன்று மாலை உத்தர பிரதேச மாநிலத்திற்கு அவரது நடைபயணம் சென்றடைகிறது.

    இன்று காலை பீகார் மாநிலம் சசாரமில் ராகுல் காந்தியை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் அவரை வரவேற்றார். பின்னர் ராகுல் காந்தியை ஜீப்பில் (Wrangler) அமர வைத்து தேஜஸ்வி யாதவ் ஜீப்பை ஓட்டினார்.

    ராகுல்காந்தி கைமுரில் இன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார்.

    நிதிஷ் குமார் இந்தியா கூட்டணி உடனான தொடர்பை முறித்துக் கொண்ட பிறகு தேஜஸ்வி யாதவ் ராகுல் காந்தியுடன் மேடையில் தோன்றும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். ரோஹ்தாஸ் என்ற இடத்தில் ராகுல் காந்தி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    • லாலு கட்சி உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பா.ஜனதாவுடன் இணைந்தார் நிதிஷ் குமார்.
    • பா.ஜனதா ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்ற நிலையில், இன்று மெஜாரிட்டியை நிரூபிக்க இருக்கிறார்.

    பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தார். லாலு யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்தார்.

    திடீரென கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், பா.ஜனதாவுடன் இணைந்தார். இதனால் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் பா.ஜனதா ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இதனால் இன்று பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. நிதிஷ் குமார் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார்.

    இதற்கிடையே பீகாரில் எம்.எல்.ஏ.-க்களை இழுக்க குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் அக்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

     

    நேற்று எம்.எல்.ஏ.-க்களுடன் தேஜஸ்வி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதற்கிடையே தேஜஸ்வி யாதவ் வீட்டை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தேஜஸ்வி வீட்டிற்குள் நுழைந்து எம்.எல்.ஏ.-க்களிடம் விரும்பத்தாக நிகழ்வுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டுாம்" என ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.

    243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் மெஜரிட்டியை நிரூபிக்க 123 பேர் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    நிதிஷ் குமாருக்கு ஆதரவு

    நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 127 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. பெரும்பான்மை பலத்தை விட இந்த கூட்டணிக்கு கூடுதலாக 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

    எதிர்க்கட்சிகள்

    எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 77 எம்.எல்.ஏ.க்கள், லெனின் கம்யூனிஸ்டுக்கு 12 எம்.எல்.ஏ.க்கள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல். ஏ.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் என 93 எம்.எல்.ஏ.க்கள் பலமே உள்ளது.

    • கடந்த ஜூலை 3-ந்தேதி சி.பி.ஐ. 2-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.
    • வழக்கில் லாலுபிரசாத் யாதவ், ராப்ரிதேவி உள்ளிட்ட 14 பேர் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    புதுடெல்லி:

    ரெயில்வே பணி வழங்குவதற்கு நிலத்தை லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தள நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பார்தி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    இந்த வழக்கில் கடந்த ஜூலை 3-ந்தேதி சி.பி.ஐ. 2-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் லாலுபிரசாத் யாதவ், ராப்ரிதேவி உள்ளிட்ட 14 பேர் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் உள்ளிட்டோர் இன்று காலை டெல்லியில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்கள்.

    ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு பிரசாத் யாதவ், ராப்ரிதேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி கீதாஞ்சலி கோயல் உத்தரவிட்டார்.

    • சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைக்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    • ரக்ஷாபந்தனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசு என தெரிவிக்கப்பட்டது.

    மும்பை:

    மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ரக்ஷாபந்தனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசு என தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ், தனது தந்தை லாலு பிரசாத் யாதவுடன் இன்று மும்பை வந்துள்ளார்.

    இந்நிலையில், நாங்கள் தந்த அழுத்தம் காரணமாகவே சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளனர் என பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியா கூட்டணியின் 2வது கூட்டம் நடைபெற்றதன் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மத்திய அரசு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது. 3வது கூட்டத்தில் எல்லாம் முடிவானதும் எங்கள் கூட்டணியின் பலம் முழுவதும் தெரிய வரும் என தெரிவித்தார்.

    • சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

    தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டம் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது.

    இதற்காக ரூ.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பே திருவாரூர் வந்து விட்டார். நேற்று விழா ஏற்பாடுகளை கவனித்தார். இன்று காலையிலும் கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியை காண வந்திருந்தார்.

    காலை 10 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சி மங்கள இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. முதலில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.

    இதில் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை வாசித்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

    இதன் பிறகு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் 'பேச்சே' என்ற தலைப்பில் புலவர் சண்முக வடிவேல், கவிதா ஜவகர், ராஜா ஆகியோர் பேசினார்கள். 'எழுத்தே' என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசினார்கள்.

    நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்தார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைக்கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அமர்ந்து பார்வையிட்டனர்.

    காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 3.30 மணிக்கு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.

    கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், சஞ்சய்சிங் எம்.பி. ஆகிய இருவரும் பீகாரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் செல்கின்றனர். அவர்களுடன் திருச்சி சிவா எம்.பி.யும் செல்கிறார்.

    இதனால் கலைஞர் கோட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மாலை திறக்கப்படுகிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த விழாவில் நிதிஷ் குமார் திடீரென கலந்து கொள்ளாதது தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
    • முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார்.

    திருவாரூர்:

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

    அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

    சுமார் 7,000 சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது .

    இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார். பீகார் மாநில துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தை திறந்து வைக்கிறார். கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    • தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
    • முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் -மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

    தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம், 11 மணிக்கு சாலமன் பாப்பையா பட்டிமன்றம் நடை பெறுகிறது.

    மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சே-எழுத்தே என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்தில் புலவர் சண்முக வடிவேல், கவிதா ஜவகர், எஸ்.ராஜா, எம்.ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசுகிறார்கள்.

    மதியம் 3.30 மணிக்கு பாட்டரங்கம் நடைபெறுகிறது. அதன் பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.

    கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்-மந்திாி நிதிஷ் குமார் திறந்து வைத்து பேசுகிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் -மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவே திருவாரூர் சென்று தங்கியிருக்கிறார்.

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை காலை ஐதராபாத் வழியாக திருச்சி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து திருவாரூருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். மதியம் சுமார் 2.30 மணிக்கு சென்றடைந்ததும் விழா நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன.

    நாளை மாலை 4.30 மணிக்குள் விழா முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி சென்று அதன் பிறகு விமானம் மூலம் பீகார் சென்றடைகிறார்.

    இதையொட்டி விழா நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் நகரமும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

    • பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.

    பாட்னா:

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போட்டியிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்கள், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தை பீகாரில் நடத்த மம்தா பானர்ஜி பரிந்துரைத்து இருந்தார். அதன்படி பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் 12-ந் தேதி இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    தற்போது இந்த கூட்டம் 23-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகார் துணை முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இதை அறிவித்தார்.

    நிதிஷ்குமாருடன் இணைந்து பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில், 'காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர்' என தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து இந்த தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.

    முன்னதாக எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் எனவும், பிரதிநிதிகளை அனுப்புவதை ஏற்க முடியாது என்றும் நிதிஷ்குமார் கூறியிருந்தார்.

    அதன்படி இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களே நேரடியாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

    • பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவை நேற்று சந்தித்தார்.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை நிதிஷ் குமார் இன்று சந்தித்தார்.

    புதுடெல்லி:

    பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று புதுடெல்லி வந்தார். அங்கு அவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். டெல்லியில் லாலு மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியிருந்த அவரைப் பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

    லாலு பிரசாத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்து பேசினார். அப்போது துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவும் உடனிருந்தார். அவர்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.

    அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டியது அவசியம் என தெரிவித்தனர்.

    ×