செய்திகள்

சிவசேனா தலைவர் பதவிக்கு ஜனவரி 23-ம் தேதி தேர்தல்: உத்தவ் தாக்கரே போட்டியின்றி தேர்வு?

Published On 2017-12-26 15:39 GMT   |   Update On 2017-12-26 15:39 GMT
சிவசேனா தலைவர் பதவிக்கான தேர்தல் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் மறைந்த பால் தாக்கரேவின் பிறந்தநாளான ஜனவரி 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் உத்தவ் தாக்கரே மீண்டும் ஒருமனதாக தேர்வாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை:

சிவசேனா இயக்கத்தை தோற்றுவித்த பால் தாக்கரே மரணத்தை தொடர்ந்து கடந்த 17-11-2012 அன்று மும்பையில் மரணம் அடைந்தார். பால் தாக்கரேவின் மறைவுக்கு பின்னர் தலைமை பதவியை ஏற்க மறுத்த அவரது மகன் உத்தவ் தாக்கரே, தொண்டர்களின் வலியுறுத்தலின் பேரில் 23-1-2013 அன்று அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.



இந்நிலையில், அவரது பதவிக்காலம் முடிவடைவதால் மறைந்த பால் தாக்கரேவின் பிறந்தநாளான ஜனவரி 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் வேறு யாரும் போட்டியிடாத நிலை உருவானால் அக்கட்சியின் தலைவராக உத்தவ் தாக்கரே மீண்டும் ஒருமனதாக தேர்வாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் மீண்டும் தலைவராக தேர்வான பின்னர் தனக்கு கீழுள்ள பழைய நிர்வாகிகளின் பதவியை நீட்டித்து அறிவிக்கலாம். அல்லது, புதிய நிர்வாகிகளை நியமிக்கலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News