செய்திகள்

குஜராத் தேர்தல்: காங். ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி

Published On 2017-12-18 06:27 GMT   |   Update On 2017-12-18 06:27 GMT
குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் வத்கம் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கிய தலித் நல ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி பெற்றுள்ளார்.
காந்திநகர்:

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடைபெற்றது. 68.41 சதவிகித வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகியிருந்தன. பதிவான வாக்குகள் 37 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க முன்னிலை வகித்து வந்தது. ஆனால், இதனையடுத்து காங்கிரஸ் கட்சி திடீரென 10 தொகுதிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. சிறிது நேர இடைவேளையில் பா.ஜ.க 105 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் கட்சி 75 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. இதன் மூலம், குஜராத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் வத்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட தலித் நல ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத்தில் பசுவதை என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்து இவர் பலமுறை பேசியிருக்கிறார். உனாவில் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பெரிய 'உனா பேரணியை' 2016ல் நடத்தி காட்டினார். இதில் 20,000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News