செய்திகள்

ஒக்கி புயலால் பாதிப்படைந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கவேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

Published On 2017-12-17 20:51 GMT   |   Update On 2017-12-17 20:51 GMT
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், ஒக்கி புயலால் பாதிப்படைந்த மீனவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

ஒக்கி புயலால் தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் கேரளா, லட்சத்தீவு பகுதிகள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே இந்த பகுதிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிதி உதவி அளிக்க வேண்டும்.

தமிழகம் மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் அலைகள் சீற்றத்தை தடுக்க சுவர்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சனையின் மீது கவனம் செலுத்தி முன்னுரிமை கொடுத்து அதனை சரிசெய்ய வேண்டும். மேலும் வீடு, சுகாதாரம், உரிய கல்வி கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ற பின், முதல் முறையாக பிரதமருக்கு தமிழகத்திற்கு ஆதரவாக கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News