செய்திகள்

குளிர்கால கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த வேண்டும்: அனைத்து கட்சிகளிடம் ஒத்துழைப்பு கேட்கும் மோடி

Published On 2017-12-14 14:35 GMT   |   Update On 2017-12-14 14:35 GMT
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை அர்த்தமுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாக, டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு, மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, குளிர்கால கூட்டத் தொடரை அர்த்தமுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக, அரசியல் பாகுபாடுகளைக் கடந்து அனைத்து கட்சிகளும் கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேபோல், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டமும் நடக்கிறது. இதை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஏற்பாடு செய்துள்ளார்.
Tags:    

Similar News