செய்திகள்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

Published On 2017-12-11 08:11 GMT   |   Update On 2017-12-11 08:11 GMT
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:

கன்னியாகுமரி மகாசபா செயலாளரான நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன், நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழை தமிழக அரசு வழங்குவதுடன் உரிய உத்தரவுகளையும் 8 வாரத்திற்குள் பிறப்பிக்க வேண்டும் என்று செப்டம்பர் 11-ம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. நவோதயா பள்ளிகளை அமைக்க போதிய கால அவகாசம் வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், சென்னை ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர்.

மேலும், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News