செய்திகள்

மரங்கள் பட்டியலில் இருந்து மூங்கில் நீக்கம் - அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

Published On 2017-11-24 00:03 GMT   |   Update On 2017-11-24 00:03 GMT
வனம் இல்லாத பகுதிகளில் வளரும் மூங்கில், மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்து உள்ளார்.
புதுடெல்லி:

விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் அதிக அளவு மூங்கில் தோட்டங்களை வைத்து லாபம் ஈட்டுவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



ஆனால் இந்திய வனச்சட்டம் 1927-ன்படி மூங்கிலை வெட்டவும், கொண்டு செல்லவும் அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்ற விதி உள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் இடையூறாக இருந்ததால் இந்த சட்டத்தை திருத்தி அவசர சட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்து உள்ளார். இதன்படி வனம் அல்லாத பகுதிகளில் வளர்க்கப்படும் மூங்கிலை வெட்டவும், கொண்டு செல்லவும் அனுமதி பெறுவதில் விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு வசதியாக வனம் இல்லாத பகுதிகளில் வளரும் மூங்கில், மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

எனினும் வனப்பகுதிகளில் வளரும் மூங்கில், வனப்பாதுகாப்பு சட்டம் 1980-ன் கீழ் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டதாகவே அறிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News