செய்திகள்

துபாயில் இருந்து கேரளாவுக்கு ரூ. 15 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தல்

Published On 2017-11-21 11:39 GMT   |   Update On 2017-11-21 11:39 GMT
துபாயில் இருந்து கேரளாவுக்கு ரூ. 15 கோடி மதிப்பிலான போதை பொருளை கடத்தி வந்த பிரேசில் வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கொச்சி நெடும்பாச்சேரி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானம் தரை இறங்கியது. அதில் இருந்து இறங்கி வந்த வெளிநாட்டு வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

அவரை தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தனது பனியன், உள்ளாடை, ஷூ ஆகியவற்றில் கொக்கைன் எனப்படும் போதை பொருளை பேப்பரில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

இந்த போதை பொருள் முன்றே முக்கால் கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பு ரூ. 15 கோடி ஆகும் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்

அந்த வாலிபரிடம் அதிகாரிகள் விசாரித்த போது அவரது பெயர் அலெக்ஸ் விகாலெண்ட் பெர்ணான்டஸ் (30). பிரேசில் நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரை அதிகாரிகள் கைது செய்தனர்



இவர் பிரேசிலில் இருந்து துபாய்க்கு விமானத்தில் வந்து அங்கிருந்து விமானம் மூலம் கொச்சிக்கு இந்த போதை பொருளை கடத்தி வந்துள்ளார். இந்த போதை பொருள் கோவா எர்ணாகுளம், கோவை, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேர நடனம் நடைபெறும் விடுதிகளுக்கு கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவில் இதுவரை 200, 300 கிராம் முதல் அரை கிலோ வரை தான் போதை பொருள் கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது தான் மிகப்பெரிய அளவில் மூன்றே முக்கால் கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News