செய்திகள்

சர்ச்சைகளுக்கு மத்தியில் தொடங்குகிறது கோவா சர்வதேச திரைப்பட விழா

Published On 2017-11-20 04:17 GMT   |   Update On 2017-11-20 04:17 GMT
நடுவர்கள் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 2 திரைப்படங்களை மத்திய அரசு நீக்கியுள்ள நிலையில், கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது.
பனாஜி:

கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சுமார் 200 படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளது.

இந்த விழாவில் திரையிடப்படுவதற்கான இந்திய திரைப்படங்கள், மற்றும் விருதுக்குரிய திரைப்படங்களை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடுவர் பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த ‘எஸ். துர்கா’ என்ற மலையாளப் படம் மற்றும் ‘நியூட்’ (நிர்வாணம்) என்ற மராத்தி மொழிப் படம் ஆகிவற்றை நீக்கம் செய்து திரையிடப்படும் இந்திய படங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது.

இது தேர்வுக்குழு தலைவர் மற்றும் நடுவர்களில் சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கோவா திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரபல பாலிவுட் இயக்குநர் சுஜோய் கோஷ் அறிவித்திருந்தார். அவரை தொடர்ந்து தேர்வுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பிரபல தேசிய விருது பெற்ற இந்திப் பட இயக்குனரும் திரைக்கதை ஆசிரியருமான அபுர்வா அஸ்ரானி தெரிவித்தார்.
Tags:    

Similar News