search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச திரைப்பட விழா"

    • சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெறுகிறது.
    • இதில் தமிழ் படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது.

    மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது.

    இந்த விழாவில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான 'விடுதலை' திரைப்படம் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சம்யுக்த விஜயன் இயக்கிய நீல நிற சூரியன், காதல் என்பது பொதுவுடமை உள்ளிட்ட படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. Non feature film பிரிவில் பிரவீன் செல்வம் இயக்கிய 'நன்செய் நிலம்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    • இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது.
    • மத்திய அரசு சிறந்த வாழ்நாள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய பனோரமா பிரிவில் திரைப்படம் மற்றும் குறும்படங்களை திரையிடுவதற்கான விண்ணப்பங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் வரவேற்றது.

    இதில், திரைப்படங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 10ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கோவாவின் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸுக்கு, 54வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில், புகழ்பெற்ற சத்யஜித் ரே திரைப்பட வாழ்நாள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நமது நாட்டின் மீது அவருக்குள்ள ஆழ்ந்த அன்பு நன்கு அறியப்பட்டதாகும். மேலும், நமது செழுமையான சினிமா கலாச்சாரம் மற்றும் தனித்துவமான பாரம்பரியங்களை வெளிப்படுத்த தெற்காசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாவிற்கு அவரை, கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் மற்றும் அவர்களது மகனை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    பாரத்திற்கும், 54வது இந்திய சர்வதேச விழாவிற்கும் அன்புடன் வரவேற்க்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • 11-வது சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழா அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் தொடங்கியது.
    • நாளை வரை நடைபெறும் இவ்விழாவில் விருது பெற்ற சர்வதேச அளவிலான சிறந்த படங்கள் திரையிடப்படுகிறது.

    புதுவை திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சே, மும்பை மத்திய திரைப்பட பிரிவு, தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம், தமிழ்நாடு முற்பாக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் இணைந்து 11-வது சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழா அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் தொடங்கியது.


    விழாவை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார். தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக பொது மேலாளர் ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சங்கம் ஆதவன்தீட்சண்யா, எழுத்தாளர் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    விழாவில் திரைப்பட குறிப்பு புத்தகத்தை அலையன்ஸ் பிரான்சே, இயக்குனர் லொரேன்ஜலிகு வெளியிட்டார். நாளை (6-ந்தேதி) வரை நடைபெறும் இவ்விழாவில் விருது பெற்ற சர்வதேச அளவிலான சிறந்த படங்கள் திரையிடப்படுகிறது. 9 நாடுகளை சேர்ந்த படங்களுடன் 32 படங்கள் திரையிடப்படுகிறது. தமிழகம், புதுவையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளம் படைப்பாளிகளின் இலக்கிய படைப்புகளும் இடம்பெறுகிறது.

    • சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
    • இந்த விழாவில் 102 படங்கள் திரையிடப்பட்டது.

    சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்ட இந்த விழாவானது நேற்று நிறைவு பெற்றது. இதில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான 'மாமனிதன்' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.


    மாமனிதன்

    இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "திரைப்படங்களை பார்த்துவிட்டு கடந்து போய் விடாமல் இயக்குநர்கள் கதையின் வாயிலாக தெரிவிக்க விரும்பும் விஷயங்களை புரிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபடுங்கள். வாழ்க்கையின் அனுபவங்கள்தான் திரைப்படங்களாகின்றன. அந்த அனுபவத்தின் வழியாக ஒரு இயக்குனர் தன்னுடைய பார்வையை சொல்கிறார். முடிந்த அளவு ஒரு திரைப்படத்தை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். வாழ்க்கையை புரிந்துகொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன.


    விஜய் சேதுபதி - சீனுராமசாமி

    எந்தவொரு படத்தையும் விமர்சனங்களின் வாயிலாக புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள். அது நல்லதல்ல. இப்போதெல்லாம் யூடியூப்பில் கெட்டது பேசினால் வியூஸ் கூடுகிறது அதனால் பணம் வருகிறது. விமர்சகர்கள் பார்வையில் திரைப்படங்கள் சரியாக பார்க்கப்படுகின்றதா எனத் தெரியவில்லை. உங்களுடைய பார்வையில் உங்களுடைய வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி ஒரு திரைப்படத்தை பாருங்கள். நடிகர் பூ ராமுவுடன் இணைந்து இந்த விருதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி" எனத் தெரிவித்தார். மேலும் விஜய் சேதுபதி விருதுக்கான பரிசுத்தொகையை விழாக்குழுவிற்கு நன்கொடையாக வழங்கினார்.

    கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஹேம மாலினிக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.
    பனாஜி:

    கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. திரைப்பட விழாவில் சர்வதேச பிரிவில் சுமார் 73 நாடுகளில் இருந்து 148 படங்கள் இடம்பெறுகின்றன. 28ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5, வூட், சோனி லைவ் ஓடிடி தளங்கள் விழாவில் கலந்து கொள்கின்றன.

    துவக்க விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர், மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங், மத்திய  ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சுமார் 75 திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது ஹேம மாலினிக்கு வழங்கப்பட்டது. விருதை மத்திய மந்திரி அனுராக் தாகூர், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் வழங்கினர். இதேபோல், சிறந்த பாடலாசிரியரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷிக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

    ஹாலிவுட் பிரபலம் மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் புகழ்பெற்ற ஹங்கேரிய திரைப்பட தயாரிப்பாளர் இஸ்டெவன் சாபோ ஆகியோருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
    ×