என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்ஷா"

    லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துதுள்ளது.

    இந்திய அளவில் புகழ் பெற்ற ராப் பாடகர் பாட்ஷா. இவரது சமீபத்திய பாடல் "ததீரி" வெளியாகி வரவேற்புக்கு இணையான சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது. இந்தப் பாடல் தொடர்பான சர்ச்சையில் இவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில், 'ததீரி' பாடலில் பெண்கள் மற்றும் சிறார்களைப் பற்றி ஆட்சேபனைக்குரிய பாடல் வரிகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து, பாடகர்-ராப்பர் பாட்ஷாவுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துதுள்ளது.

    லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் உறுப்பினர்கள், பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், பாட்ஷாவை "அவரது நெற்றியில் சுடுவதாக" மிரட்டினர். "பாடகர் பாட்ஷா, நீங்கள் ஹரியானாவின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சித்தீர்கள். 2024-இல் உங்கள் கிளப்பில் டிரெய்லரை உங்களுக்குக் காட்டினோம்; அடுத்த முறை நாங்கள் உங்கள் நெற்றியில் நேரடியாகச் சுடுவோம்" என்று கூறப்பட்டுள்ளது.

    2024-ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள ஒரு கிளப்பிற்கு வெளியே, பாடகரும் ராப்பருமான பாட்ஷாவுக்குச் சொந்தமான செவில்லே பார் மற்றும் லவுஞ்சில் ஒரு வெடி விப்த்து ஏற்பட்டது - இதற்கு லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்புடைய கனடாவைச் சேர்ந்த பயங்கரவாதி கோல்டி பிரார் பொறுப்பேற்றிருந்தார்.

    பாத்ஷாவின் சமீபத்திய ஹரியான்வி பாடல் `ததீரி' (Tateeree) தொடர்பாகக் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார்; இந்தப் பாடலில் ஆட்சேபனைக்குரிய வரிகளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பஞ்ச்குலாவைச் சேர்ந்த ஒரு நபர் அளித்த புகாரின் அடிப்படையில், பாத்ஷா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

    இந்தப் பாடல் பாட்ஷாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு, இணையத்தில் வெகுவாகப் பரவியது. கடந்த வாரம், இந்தப் பாடலின் மூலம் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று கூறி, பாட்ஷா மன்னிப்பு கோரினார்.

    51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன. அவற்றில் 13 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும்.

    இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.

    அந்த வகையில் 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 11 முதல் 18 வரை சென்னை பிவிஆர் சினிமாஸ் -இல் நடைபெற உள்ளது.

    51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன. அவற்றில் 13 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும்.

    உலகளவில் உள்ள திரைப்பட இயக்குனர்கள், வெளிநாட்டு தூதர்கள், உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

    உலகின் மற்ற பிரபலமான திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்கள் இந்த ஆண்டு திரையிடப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    அந்த வகையில் இதில் திரையிடப்பட்ட 12 தமிழ் படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில், டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், பறந்து போ, 3 பிஎச்கே, அலங்கு, வேம்பு, பிடிமண், காதல் என்பது பொது உடைமை, மாயக்கூத்து, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், மெட்ராஸ் மேட்னி, மருதம், ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

    இவை தவிர்த்து சிறப்பு திரையிடலுக்கு பாட்ஷா படம் தேர்வாகி உள்ளது.

    ரஜினியின் 50 ஆண்டுகால சினிமா பங்களிப்பை போற்றும் விதமாக மற்றும் பாட்ஷா படத்தின் 30 ஆண்டு கால பயணைத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் 60 ஆண்டு கால பயணத்தையும் கொண்டாடும் விதமாக இப்படம் திரையிடப்படுகிறது. 

    ×