search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayali"

    • அயலி கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
    • பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் உள்ள அயலி ஜீ5 தளத்தில் வெளியானது.

    இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    அயலி கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி திரையுலகினர், சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை அயலி இணையத் தொடர் பெற்றது.

    இந்நிலையில், பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஜீ5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், சிறந்த இணைய தொடருக்கான விருதுக்கு அயலி பிரந்துரை செய்யப்பட்டுள்ளது.

    கோவாவில் நடைபெறும் 55வது சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த இணைய தொடருக்கான விருதுக்கு தமிழில் வெளியான அயலி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இதில், காலாபாணி, கோட்டா ஃபேக்டரி, லாம்பான், ஜூப்ளி ஆகிய மற்ற மொழி இணைய தொடர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    • சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இணையத் தொடர் அயலி.
    • இந்த இணையத் தொடர் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளார்.

    இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த ஜனவரி 26 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி திரையுலகினர், சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை அயலி இணையத் தொடர் பெற்றது.


    இந்நிலையில், பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஜீ5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur) பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இந்த திரையிடலில் 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பை சார்ந்த 35 மாணவிகள் பங்கேற்றனர்.



    ஜீ5 நிறுவனம் முன்னெடுத்த இவ்விழாவினில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ் அரசின் முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திரு கே.நந்தகுமார் ஐஏஎஸ்., கமிஷனர் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.


    இந்நிகழ்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, அயலி நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய படைப்பு முதலில் இந்த இணையத்தொடருக்காக ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இது ஒரு பொழுது போக்கு தொடர் அல்ல, நாம் பெண்ணடிமைத்தனத்தில் எந்த இடத்திலிருந்து இப்போதைய நிலைக்கு வந்துள்ளோம் என்பதற்கு சான்றாக இந்த தொடர் உருவாகியுள்ளது.



    கல்வி என்பது ஆண் பெண் என பார்க்காமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதற்கு இந்த அரசாங்கம் பாடுபட்டு வருகிறது. கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவுத்திட்டம் முதலாக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாம் பெரியார் அண்ணா கலைஞர் காலங்களில் பெண்ணுரிமைக்காக போராடி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். இதனை மிக அழகாக இந்த தொடர் சித்தரித்துள்ளது இதனை உருவாக்கிய குழுவிற்கும் நடித்த நடிகர் நடிகையர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    • 'பிஸ்கோத்', 'காசேதான் கடவுளடா' ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப் இசையில் உருவாகி இருக்கும் வீடியோ இசை ஆல்பம் 'பார்வை'.
    • இதில் 'அயலி' இணையத் தொடர் மூலம் பிரபலமடைந்த அபி நட்சத்திரா நடித்துள்ளார்.

    'பிஸ்கோத்', 'காசேதான் கடவுளடா' ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப் இசையில் உருவாகி இருக்கும் வீடியோ இசை ஆல்பம் 'பார்வை'. இந்த பாடலை பாடலாசிரியர் அருண் பாரதி எழுத, பாடகி எம். எம். மானஸி மற்றும் பாடகர் சாய் விக்னேஷ் இணைந்து பாடியுள்ளனர். 'அயலி' இணையத் தொடர் மூலம் பிரபலமான நடிகை அபி நட்சத்திரா நடிப்பில் இந்த தனிப்பாடல் உருவாகியுள்ளது.

     

    அபி நட்சத்திரா

    அபி நட்சத்திரா


    இந்தப் பாடலுக்கான காணொளியை பிரசாந்த் ராமன் இயக்கியிருக்கிறார். ஈஸ்வரன் கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த ஆல்பத்தை தரணி பால்ராஜ் தொகுத்திருக்கிறார். இதனை துர்ம் புரொடக்சன் ஹவுஸ் சார்பில் தயாரிப்பாளர் தம்பிதுரை மாரியப்பன் தயாரித்திருக்கிறார்.


    அபி நட்சத்திரா

    அபி நட்சத்திரா

    பெண்கள் தினசரி தங்களது நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் குறித்தும், பெண்கள் மீதான ஆண்களின் தவறான பார்வையை மையப்படுத்தியும் இந்த பாடல் உருவாகியுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் 'பார்வை' எனும் தனிப்பாடலை இணையத்தில் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான வெப்தொடர் ‘அயலி’.
    • ’அயலி’ வெப்தொடர் சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

    இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு 8- ஆம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் தமிழ் செல்வி என்ற சிறுமி கிராம மக்களிடம் உள்ள கற்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறார்.


    இருப்பினும், வீரப்பன்னை கிராமத்தைச் சேர்ந்த இதர சிறுமிகளின் வாழ்க்கையில் ஒளி வீசச்செய்து ஒரு வழிகாட்டியாக திகழ்வதில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தொடர் கடந்த ஜனவரி 26 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி திரையுலகினர், சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.


    இந்நிலையில், இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டியுள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "அயலி'. ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குனர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அயலி' வெப்தொடர் நேற்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
    • இந்த வெப்தொடரை திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு 8- ஆம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் தமிழ் செல்வி என்ற சிறுமி கிராம மக்களிடம் உள்ள கற்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறார்.

     

    அயலி

    அயலி


    இருப்பினும், வீரப்பன்னை கிராமத்தைச் சேர்ந்த இதர சிறுமிகளின் வாழ்க்கையில் ஒளி வீசச்செய்து ஒரு வழிகாட்டியாக திகழ்வதில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தொடர் நேற்று (ஜனவரி 26) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.


    அயலி

    அயலி


    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த வெப் தொடர் திரையுலகினர், சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. பெண் பிள்ளைகளின் கனவை சமூக அக்கறையோடு காட்சிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் இயக்குனர் முத்துக்குமார் ஈர்த்துள்ளார். இந்த தொடரை நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் சேதுபதி, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, மித்ரன் ஆர் ஜவஹர், பிரசாந்த் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.

    • இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் 'அயலி'.
    • இந்த வெப்தொடர் வருகிற ஜனவரி 26 ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    அயலி

    மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு 8- ஆம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் தமிழ் செல்வி என்ற சிறுமி கிராம மக்களிடம் உள்ள கற்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறார்.


    அயலி

    இருப்பினும், வீரப்பன்னை கிராமத்தைச் சேர்ந்த இதர சிறுமிகளின் வாழ்க்கையில் ஒளி வீசச்செய்து ஒரு வழிகாட்டியாக திகழ்வதில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தொடர் வருகிற ஜனவரி 26 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.


    அயலி

    'அயலி' வெப் தொடர் குறித்து இயக்குனர் முத்துக்குமார் கூறியதாவது, "இன்று ஸ்ட்ரீமிங் தளங்கள் பொதுமக்களின் கண்ணோட்டத்தை வெற்றிகரமாக மாற்றியமைக்கக் கூடிய கதைகளை முன்வைக்கின்றன. மேலும் ஒரு பிரச்சாரமாக தோன்றாத வகையில் அந்த மாற்றத்துக்கான விதையை ஆழமாக விதைக்கும் எங்கள் உண்மையான முயற்சிதான் அயலி. இந்தத் தொடரானது, பெண்களின் கல்வி மற்றும் அதிகாரம் மற்றும் அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வயதுக்கு வந்த பெண்களின் ஒரு கதையாகும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றான இந்தக் கதையை காட்சிப்படுத்த எங்களுக்கு ஒரு தளத்தை வழங்கிய ஜீ5-க்கு நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்" என்று கூறியுள்ளார்.




    ×