பலரின் கவனத்தை ஈர்த்து வரும் அயலி

இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அயலி' வெப்தொடர் நேற்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த வெப்தொடரை திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
அயலி
அயலி
Published on

இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு 8- ஆம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் தமிழ் செல்வி என்ற சிறுமி கிராம மக்களிடம் உள்ள கற்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறார்.

அயலி
அயலி

அயலி

இருப்பினும், வீரப்பன்னை கிராமத்தைச் சேர்ந்த இதர சிறுமிகளின் வாழ்க்கையில் ஒளி வீசச்செய்து ஒரு வழிகாட்டியாக திகழ்வதில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தொடர் நேற்று (ஜனவரி 26) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

அயலி
அயலி

அயலி

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த வெப் தொடர் திரையுலகினர், சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. பெண் பிள்ளைகளின் கனவை சமூக அக்கறையோடு காட்சிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் இயக்குனர் முத்துக்குமார் ஈர்த்துள்ளார். இந்த தொடரை நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் சேதுபதி, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, மித்ரன் ஆர் ஜவஹர், பிரசாந்த் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com