என் மலர்
சினிமா செய்திகள்

சர்வதேச விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற முதல் 'ரோஹிங்கியா' திரைப்படம்!
- மியான்மரில் நடக்கும் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க முயலும் ரோஹிங்கியா இனத்தை சேர்ந்த அண்ணன், தங்கை என இரு குழந்தைகளைப் பற்றிய உணர்வுப்பூர்வமான சித்திரம் 'லாஸ்ட் லேண்ட்' .
- 'லாஸ்ட் லேண்ட்' திரைப்படம், முன்னதாக வெனிஸ் திரைப்பட விழாவின் 'ஒரிஸோன்டி' பிரிவில் அரங்கேற்றம் செய்யப்பட்டு, சிறப்பு நடுவர் பரிசை வென்றது.
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் Red Sea சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 4 தொடங்கி நேற்று (டிசம்பர் 13) உடன் முடிவடைந்தது.
இந்த விழாவில் பாலிவுட் நடிகர்களான கார்த்திக் ஆர்யன், சல்மான் கான், ஆலியா பட், கிருத்தி சனோன் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் முழுக்க ரோஹிங்கியா மொழியில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமான "லாஸ்ட் லேண்ட்" (Lost Land) படம் சிறந்த திரைப்படத்திற்கான 'கோல்டன் யுஸ்ர்' விருதை வென்றுள்ளது.
ஜப்பானியத் திரைப்படத் தயாரிப்பாளர் அக்கியோ புஜிமோட்டோ இந்த திரைப்பதை இயக்கி உள்ளார்.
மியான்மரில் நடக்கும் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க முயலும் ரோஹிங்கியா இனத்தை சேர்ந்த அண்ணன், தங்கை என இரு குழந்தைகளைப் பற்றிய உணர்வுப்பூர்வமான சித்திரம் 'லாஸ்ட் லேண்ட்' .
9 வயது சோமிரா மற்றும் அவளது தம்பி ஷாஃபி ஆகியோர், மலேசியாவில் இருக்கும் தங்கள் மாமாவிடம் சென்று சேருவதற்காக, நிலத்திலும் கடலிலும் கடத்தல்காரர்கள் மற்றும் பல அச்சுறுத்தல்களை தாண்டி செல்லும் துயரமான பயணத்தை இப்படம் சித்தரிக்கிறது.
'லாஸ்ட் லேண்ட்' திரைப்படம், முன்னதாக வெனிஸ் திரைப்பட விழாவின் 'ஒரிஸோன்டி' பிரிவில் திரையிடப்பட்டு, சிறப்பு நடுவர் பரிசை வென்றது.
ஆசியா பசிபிக் திரை விருதுகளிலும் நடுவர்களின் கிராண்ட் பரிசை இப்படம் பெற்றது.






