செய்திகள்

கெஜ்ரிவால் வாழ்க்கை குறும்படத்துக்கு தடை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-11-17 06:45 GMT   |   Update On 2017-11-17 07:33 GMT
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி குறும்படத்துக்கு தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தவிட்டுள்ளது.

புதுடெல்லி:

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பற்றிய குறும்படம் “ஆன் இன் சிக்னிபி கென்ட் மேன்” (ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்).

96 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது. சாதாரண அதிகாரியாக இருந்த கெஜ்ரிவால் மக்களை திரட்டி அரசியல் வாதியாக மாறியது பற்றி கதை சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தொடங்கி 2012-ம் ஆண்டு அவர் கட்சி கூட்டங்களில் உரையாற்றியது, வேட்பாளர்கள் தேர்வு செய்வதற்கான ஆலோசனை போன்ற காட்சிகளில் கெஜ்ரிவால் இடம் பெற்றுள்ளார். இந்த குறும்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த சினிமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தடை விதிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் நாச்சி கேதா வலேகர் என்பவர் மனு தாக்கல் செய்தார். இவர் 2013-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் மீது கறுப்பு மையை வீசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து கெஜ்ரிவால் படத்துக்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

சினிமா, மேடை, நாடகம், நாவல்கள் போன்றவை கலையை வளர்க்கின்றன. வெளிப்படையான சிந்தனைகளை முடக்கும் அதிகாரம் கோர்ட்டுக்கு கிடையாது.

பேச்சு சுதந்திரம், சிந்தனைகளின் வெளிப்பாடு போன்றவற்றை பாதுகாக்க வேண்டும். அதில் தலையிடயாருக்கும் உரிமை இல்லை. ஒரு கலைஞனுக்கு தனது திறமைகளை வெளிப்படுத்த சுதந்திரம் உண்டு.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News