search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்டு உத்தரவு"

    • தனியார் பஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இயக்காததால் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.
    • பஸ்கள் உத்தரவை மீறி இயக்குவதால் அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் ஏராளமான தனியார் பஸ்கள் பல்வேறு கிராமங்களுக்கு தினமும் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயணம் செய்து வருகின்ற னர்.

    கடந்த சில மாதங்களாக ஒரு சில தனியார் பஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பஸ்களை இயக்காமல் மற்ற தனியார் பஸ்கள் இயங்கும் நேரத்தில் பஸ்களை இயக்குவதால் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தங்கள் ஊருக்கு செல்வதாக பல மணி நேரம் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்படு கின்றனர்.

    சில தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையங்கள், வட்டார மற்றும் மண்டல போக்கு வரத்து அலுவலகங்கள் ஆகியவற்றில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கோர்ட்டில் முறையிட்டனர். பஸ்கள் முறையாக நேரத்துக்கு இயக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அதை மீறி தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி தடை ஆணை பெற்றனர்.

    ஆனால் ஒரு சில தனியார் பஸ்கள் உத்தரவை மீறி இயக்குவதால் அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மண்டல போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்து தனியார் பஸ்களின் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோர்ட்டு உத்தரவு எதிரொலி
    • அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் சீல் வைத்து பூட்டி கையகப்படுத்தினர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 36 சென்ட்பரப்பளவு உள்ள தானிய களஞ்சியம் கன்னியாகுமரி சன்னதி தெருவில் பகவதி அம்மன் கோவில் கலையரங்கம் அருகில் அமைந்துள்ளது.

    இந்த இடம் தனிப்பட்ட நிறுவனத்தின் கையில் பல வருடங்களாக இருந்து வந்தது. இந்த யாத்திரிகர்கள் தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்த இந்த இடத்தை மீட்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பல வருடங்க ளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

    இதற்கிடையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய தைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அந்த இடத்தை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர்ரத்தின வேல் பாண்டியன்தலைமையில் நாகர்கோவில் இந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் தங்கம் முன்னி லையில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், சுசீந்திரம் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், ஆய்வாளர் சுஜித், மரமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் சீல் வைத்து பூட்டி கையகப்படுத்தினர்.

    இந்த சொத்தின் மதிப்பு ரூ.18 கோடி ஆகும். இதனை எதிர்த்து இந்து யாத்திரிகள்தங்கும்விடுதி சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி இந்து யாத்திரிகர்கள் தங்கும் விடுதியில் சீலை திறந்து அவர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி கன்னியாகுமரி சன்னதி தெருவில்சீல்வைத்து பூட்டி வைக்கப்பட்டு இருந்த இந்து யாத்திரிகர்கள் தங்கும்விடுதி 2 மாதங்களுக்கு பிறகு சீல் திறக்கப்பட்டு இந்து யாத்திரிகர்கள் தங்கும்விடுதி பொறுப்பாளர் எம்.எஸ்.மணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • 4½ பவுன் சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார்.
    • வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் சி.கே.என் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது32), இவரது மனைவி பிரியங்கா (27).

    கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாண்டித்துரை வீட்டிற்கு வெளியில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் குளியலறையில் வெளியில் பூட்டிவிட்டு வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த பிரியங்கா அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கண் விழித்துக் கொண்ட பிரியங்கா வாலிபரை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார்.அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஊத்துக்குளி போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்த போது அவர் திருப்பூர் மண்ணரை கருமாராம்பா ளையம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் (33) என்பதும் அவர் மீது அனுப்பர்பாளையம், நல்லூர், மற்றும் திருப்பூர் போலீஸ் நிலையங்களில் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    இவ்வழக்கு ஊத்துக்குளி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி தரணிதார் குற்றம் சாட்டப்பட்ட கணேசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

    • தொண்டியில் பழுதடைந்த நூலக கட்டிடத்தை புனரமைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
    • சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்ப தால் வேறு வாடகை கட்டத்திற்கு நூலகம் மாற்றப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியின் சத்திரம் தெரு பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டு நூலக துறை சார்பில் பொது நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகளின் வாசிக்கும் திறன் அதிகரித்தது.

    அதன் பின்னர் இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து விட்டது. சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்ப தால் வேறு வாடகை கட்டத்திற்கு நூலகம் மாற்றப்பட்டது. அந்த கட்டிடத்தையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

    எனவே தற்போது தொண்டி-மதுரை சாலையில் உள்ள செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒரு வகுப்பறைக் கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.

    பள்ளி கட்டிடத்திற்குள் இயங்குவதால் இங்கு பொதுமக்கள் சென்று பயன்படுத்த முடியவில்லை. இதனால் இந்தப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் தொண்டி யில் உள்ள பழுதடைந்த நூலக கட்டிடத்தை இடிக்க வும், அதே இடத்தில் புதிதாக பொது நூலகம் கட்டவும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி கள் கிருஷ்ணகுமார், விஜயக்குமார் அமர்வு விசா ரித்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.

    இதன் மூலம் தமிழகம் முழு வதும் உள்ள நூலகத்தின் நிலை என்ன? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் தொண்டி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பொது நூலக கட்டிடம் புனரமைக்கப்படும் எனவும், கைபேசியின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிக்கும் திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முன்னாள் மந்திரியான கே.டி.ஜலீல் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிலர் கோர்ட்டில் மனு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ. கே.டி.ஜலீல். முன்னாள் மந்திரியான கே.டி.ஜலீல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலம் பற்றி பேஸ்புக்கில் ஒரு கருத்து பதிவிட்டார்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிலர் கோர்ட்டில் மனு செய்தனர். அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் டெல்லியிலும் கே.டி.ஜலீல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய கோரி டெல்லி கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு. கே.டி.ஜலீல் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

    • கடந்த மே 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதி வக்பு வாரியத்துக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
    • வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்தில் வாடகை தராமல் குடியிருக்கிறார்.

    சென்னை:

    திருவாரூர் மாவட்டம், பூதமங்கலத்தை சேர்ந்த நவாப்தீன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஜனாப் சையது அலி அக்பர் பதவி வகிக்கிறார்.

    இவர், வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்தில் வாடகை தராமல் குடியிருக்கிறார். அந்த சொத்தின் பட்டாவை தன் குடும்பத்தினர் பெயரில் மாற்றிக் கொண்டுள்ளார். பரம்பரை முத்தவல்லி என்று போலியான ஆவணங்களை கொடுத்து வக்பு வாரியத்தின் உறுப்பினராக உள்ளார்.

    இதுகுறித்து கடந்த மே 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதி வக்பு வாரியத்துக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, வக்பு வாரிய சட்டத்தின் அடிப்படையில், என் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி சி.சரவணன் விசாரித்தார். வக்பு வாரியம் சார்பில் வக்கீல் வி.ராகவாச்சாரி, மனுதாரர் சார்பில் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரரான சாகுல் அமீது, மனுதாரர் சிவில் வழக்கு தொடர்வது தான் சரியானது ஆகும். அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறினார்.

    ஆனால், மனுதாரர் தரப்பு கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. எனவே, மனுதாரர் கொடுத்த 2 புகார்கள் மீது தமிழ்நாடு வக்பு வாரியம் 6 வாரத்துகள் விசாரணை நடத்தி தகுந்த முடிவை அறிவிக்க வேண்டும்" என்று உத்தர விட்டார்.

    கூவம் மற்றும் அடையாறு கரையோரத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். #ChennaiCorporation

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை நகரத்தில் 2015-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம், சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களே என நீதி மன்ற ஆணைகளின்படி நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்பதில் பெருநகர சென்னை மாநகராட்சி உறுதியாக உள்ளது.

    அந்த அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

    கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்கள் போன்ற நீர்வழித்தடங்களில் மறுசீரமைப்பு செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காகவும், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும், நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் இருக்கும் பொதுமக்களுக்கும் நாவலூர், திருவொற்றியூர், எழில்நகர் ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் அடையாறு நதியின் கரையோரம் 9,539 குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர் என கண்டறியப்பட்டு, 4,134 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கூவம் நதி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு, கூவம் நதியோரம் 14,257 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 6,879 குடும்பங்கள் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக் கால்வாய்கள் ஓரம் மொத்தம் 3,041 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 1,671 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    விரிவாக்கப்பட்ட பெரு நகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் வெள்ளத்தடுப்பு கட்டும் பணி மேற்கொள்ள நான்கு கால்வாய்களின் ஓரம் வசித்த 81 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கண்டறியப்பட்டு, 81 குடும்பங்களும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கூவம் நதி, அடையாறு நதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழிக்கால்வாய்களில், 26,837 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இதுவரை 12,765 குடும்பங்கள் தமிழ் நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி, மறுகுடியமர்வு செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ChennaiCorporation

    ×