பழுதடைந்த நூலக கட்டிடத்தை புனரமைக்க கோர்ட்டு உத்தரவு

தொண்டியில் பழுதடைந்த நூலக கட்டிடத்தை புனரமைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்ப தால் வேறு வாடகை கட்டத்திற்கு நூலகம் மாற்றப்பட்டது.
நூலக கட்டிடம் பழுதடைந்திருப்பதை படத்தில் காணலாம். 
நூலக கட்டிடம் பழுதடைந்திருப்பதை படத்தில் காணலாம். 
Published on

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியின் சத்திரம் தெரு பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டு நூலக துறை சார்பில் பொது நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகளின் வாசிக்கும் திறன் அதிகரித்தது.

அதன் பின்னர் இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து விட்டது. சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்ப தால் வேறு வாடகை கட்டத்திற்கு நூலகம் மாற்றப்பட்டது. அந்த கட்டிடத்தையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

எனவே தற்போது தொண்டி-மதுரை சாலையில் உள்ள செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒரு வகுப்பறைக் கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.

பள்ளி கட்டிடத்திற்குள் இயங்குவதால் இங்கு பொதுமக்கள் சென்று பயன்படுத்த முடியவில்லை. இதனால் இந்தப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் தொண்டி யில் உள்ள பழுதடைந்த நூலக கட்டிடத்தை இடிக்க வும், அதே இடத்தில் புதிதாக பொது நூலகம் கட்டவும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி கள் கிருஷ்ணகுமார், விஜயக்குமார் அமர்வு விசா ரித்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.

இதன் மூலம் தமிழகம் முழு வதும் உள்ள நூலகத்தின் நிலை என்ன? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் தொண்டி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பொது நூலக கட்டிடம் புனரமைக்கப்படும் எனவும், கைபேசியின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிக்கும் திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com