என் மலர்
செய்திகள்

தெலுங்குதேசம் எம்.எல்.ஏ மீது நடிகை ரோஜா அளித்த புகாரில் வழக்கு பதிய வேண்டும் - போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தெலுங்குதேசம் எம்.எல்.ஏ மீது நடிகை ரோஜா அளித்த புகாரில் வழக்கு பதிய வேண்டும் என்று போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#ActorRoja #TeluguDesamParty
நகரி:
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ நடிகை ரோஜாவை, பெணமலூர் தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. பொடே பிரசாத் அவதூறாக பேசி பேட்டி கொடுத்தார்.
இதையடுத்து ரோஜா போலீசில் பொடெ பிரசாத் மீது புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதுதொடர் பாக ரோஜா ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், என்னைப்பற்றி அவதூறாகவும், ஆபாச மாகவும் பேசிய பொடே பிரசாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தர விடவேண்டும் என்று கூறி இருந்தார்.
மேலும், பொடே பிரசாத் பேசிய சிடியையும் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், பெண் எம்.எல்.ஏ.வான ரோஜா பற்றி பொடே பிரசாத் தரக் குறைவாக பேசி இருக்கிறார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.#ActorRoja #TeluguDesamParty
Next Story






