search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் பொதுக் கூட்ட வழக்கில் கெஜ்ரிவால் விடுதலை - மும்பை கோர்ட்டு உத்தரவு
    X

    தேர்தல் பொதுக் கூட்ட வழக்கில் கெஜ்ரிவால் விடுதலை - மும்பை கோர்ட்டு உத்தரவு

    தேர்தல் பொதுக் கூட்ட வழக்கில் டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்ய மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ArvindKejriwal #Election

    மும்பை:

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் பொதுக் கூட்டம் மும்பை புறநகரில் நடந்தது.

    ஆம் ஆத்மி வேட்பாளர் மீரா சன்யாலை ஆதரித்து நடந்த இந்த பேரணியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் சமூக சேவகர் மேதா பட்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    போலீஸ் அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்தியதாகவும், ஒலி பெருக்கி பயன்படுத்தியதாகவும் மராட்டிய போலீசாரால் சட்டப் படி கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது மாதிரியான குற்றச்சாட்டுக்கு 8 நாட்கள் சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

    இந்த வழக்கு மும்பை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு பி.கே.தேஷ் பாண்டே முன்னிலையில் நடந்தது.

     


    இந்த வழக்கில் கெஜ்ரிவால், மேதாபட்கர், மீரா சன்யால் உள்பட 8 பேரை விடுவித்து மும்பை கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்ததற்காக எழுத்துபூர்வமான அறிக்கையை போலீஸ் தாக்கல் செய்யாததை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும் மின்னணு சான்றுகள், சாட்சிகளின் வாக்கு மூலம் ஆகியவற்றையும் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத தாலும் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். #ArvindKejriwal #Election

    Next Story
    ×