செய்திகள்

முதல்வரை நெருங்க வேண்டாம்: செய்தியாளர்களுக்கு தடை போட்ட அரியானா அரசு

Published On 2017-11-15 16:23 GMT   |   Update On 2017-11-15 16:24 GMT
அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டாரை செய்தியாளர்கள் நெருங்கிச்சென்று செய்தி சேகரிக்க வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சண்டிகர்:

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பினார். அதில், ‘ஊடகவியலாளர்கள் முதல்வரை நெருங்கிச் சென்று தனித்தனியாக பேட்டி எடுக்கக்கூடாது. ஒட்டு மொத்தமாக நின்று பேட்டி காண வேண்டும். முதல்வர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த பின்னர், தனித்தனியக பேட்டி எடுப்பதற்காக நிருபர்கள் ஓடக்கூடாது.

செய்தியாளர்கள் மைக்குகள் மற்றும் கேமராக்களுடன் முதல்வரை நெருங்கும் போது பாதுகாப்பு குறைபாடுகளை அதிகாரிகளால் கணிக்க முடியாமல் போகின்றது.  முதல்-மந்திரிக்கும் சிரமமாக உள்ளது. எனவே, முதல்வரின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது’ என  கூறப்பட்டிருந்தது.

இது செய்தியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அந்த உத்தரவு உடனடியாக திரும்ப பெறப்பட்டது.

ரியான் கொலை வழக்கை குர்கான் போலீஸ் கையாண்ட விதம் தொடர்பான கேள்விகளை முதல்வர் கட்டார் தவிர்த்த நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News