செய்திகள்
பேத்தியுடன் ராமன்சிங்

பிரசவத்துக்காக மருமகளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த சத்தீஸ்கர் முதல்-மந்திரி

Published On 2017-11-12 08:18 GMT   |   Update On 2017-11-12 08:18 GMT
சத்தீஸ்கர் முதல் மந்திரி ராமன்சிங் அவரது மருமகளை பிரசவத்துக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவரது மருமகளுக்கு பெண் குழந்தை பிறந்தது.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநில முதல்- மந்திரி ஆக ராமன்சிங் பதவி வகிக்கிறார். இவர் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்.

இவரது மகன் அபிஷேக். இவர் எம்.பி. ஆக இருக்கிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்தார். நேற்று இவருக்கு பிரசவவலி ஏற்பட்டது.

உடனே முதல்-மந்திரி ராமன்சிங்கும் அவரது குடும்பத்தினரும் அவரை பிரசவத்துக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கவில்லை.

மாறாக அவரை ராய்ப்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று காலை 10.30 மணிக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அப்போது முதல்-மந்திரிராமன் சிங், அவரது மகனும் ஐஸ்வர்யாவின் கணவருமான அபிஷேக் எம்.பி. மற்றும் குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் இருந்தனர்.

குழந்தை பிறந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும் முதல்-மந்திரிராமன் சிங் மகிழ்ச்சி அடைந்தார். ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தனது பேத்தியை கையில் தூக்கி கொஞ்சினார். இந்த போட்டோவை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
Tags:    

Similar News