செய்திகள்

புதிய விதியின் படி வங்கிக்கணக்கை ஆதார் உடன் இணைப்பது கட்டாயமே: ரிசர்வ் வங்கி

Published On 2017-10-21 11:43 GMT   |   Update On 2017-10-21 11:43 GMT
சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுக்கும் வகையில் திருத்தப்பட்ட விதிமுறைகளின் படி வங்கிக்கணக்கை ஆதார் உடன் இணைப்பது கட்டாயமே என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பை:

வங்கிக்கணக்கு உடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை. சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக கடந்த ஜூன் 1-ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், புதிய கணக்கு தொடங்குபவர்கள் தங்களின் ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பறிமாற்றத்தை தடுக்கும் விதமாக திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமே என ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News