செய்திகள்

வருமான வரி அதிகாரிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த எச்சரிக்கை

Published On 2017-10-21 03:48 GMT   |   Update On 2017-10-21 03:48 GMT
புதிய சாப்ட்வேர் அமலாக்கத்தை 3 மாதங்கள் தள்ளி வைக்கும் கோரிக்கையை ஏற்கப்படாவிட்டால், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை:

வருமான வரித்துறையில் தற்போதுள்ள ஏ.எஸ்.டி. சாப்ட்வேரை அகற்றிவிட்டு, ஐ.டி.பி.ஏ. என்ற அதிநவீன சாப்ட்வேரை 7 மெட்ரோ நகரங்களில் படிப்படியாக அமல்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த சாப்ட்வேருக்கு ஊழியர்கள் பழகும்வரை, வெளியில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தவும் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், புதிய சாப்ட்வேர் அமலாக்கத்தை 3 மாதங்கள் தள்ளி வைக்குமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு, மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகவலை கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் ரூபக் சர்க்கார் நேற்று தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி நவம்பர் 10-ந் தேதி கூடி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News