செய்திகள்

வளரும் நாடுகளின் பொருளாதாரம் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்காது: பிரதமர் மோடி

Published On 2017-10-04 18:34 GMT   |   Update On 2017-10-04 18:34 GMT
இந்தியாவைப் போல வளரும் நாடு ஒன்றின் பொருளாதாரம் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் என நினைக்க கூடாது என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவைப் போல வளரும் நாடு ஒன்றின் பொருளாதாரம் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் என நினைக்க கூடாது என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இந்திய கம்பெனி செயலாளர்கள் மையத்தின் 50-வது பொன்விழா புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் தலைமை வகித்த பிரதமர் மோடி, பொருளாதார மந்தநிலை குறித்து மத்திய அரசை அதிகமானோர் விமர்சித்து வரும் நிலையில் அதற்கு பதில் கூறும் விதமாக பேசியதாவது:-

வளரும் நாடு ஒன்றின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் எப்பொழுதும் வளர்ந்து கொண்டே இருக்கும் என நினைக்கக்கூடாது. கடந்த 6 ஆண்டு காலத்தில் இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வெறும் 5.7 சதவீதம் தான் இருந்தது.

கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீத இருந்த பின்னர் பணமதிப்பீட்டு இழப்பிற்கு பின்னர் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதை ஏற்றுக்கொள்கிறோம். வரும் காலாண்டில் 7.7 சதவீத வளர்ச்சி பெறும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. சிலருக்கு நமது பொருளாதாரத்தை பற்றி அவ நம்பிக்கைகளை பரப்புவதில் அவ்வளவு ஆர்வம். இத்தகைய அவநம்பிக்கை மற்றும் அவதூறுகளை பரப்பினால் தான் அன்று இரவு அவர்களால் நிம்மதியாக தூங்க முடியும். அவ்வாறு பேசுபவர்களை நாம் அடையாளம் காணவேண்டியது அவசியமாகிறது.

கருப்பு பணத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜி.எஸ்.டி சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சிலை நான் ஏற்கனவே கேட்டுகொண்டுள்ளேன்.  கார் விற்பனை, விமான போக்குவரத்து, விமான சேவை மற்றும் தொலைபேசி சந்தாதாரர்களிண் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

ஏழை நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்படுத்துவதை நோக்கமாக நம்முடைய கொள்கைகளும் திட்டங்களும் அமைந்துள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Tags:    

Similar News