செய்திகள்

கொலை வழக்கில் கைதான காவலர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை

Published On 2017-09-29 13:05 GMT   |   Update On 2017-09-29 13:05 GMT
மேற்கு வங்காளம் மாநிலத்தில் கொலை வழக்கில் கைதான ஊர்க்காவல் படை வீரர் சிறைக்குள் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் கொலை வழக்கில் கைதான ஊர்க்காவல் படை வீரர் சிறைக்குள் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளம் மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜிவ் தாஸ். சிலிகுரி மாவட்ட காவல்துறையில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றிவந்த இவர் தனது வீட்டுக்கு அருகாமையில் இருந்த ஒருவரை கொன்ற வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த ராஜிவ் தாஸ் மன அழுத்ததால் பாதித்த நிலையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று காலை சிறையில் உள்ள கழிப்பறையில் ராஜிவ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட சககைதிகள் சிறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News