செய்திகள்

இந்தியாவில் தினமும் 2 ஆயிரம் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை

Published On 2017-09-24 06:22 GMT   |   Update On 2017-09-24 06:22 GMT
சீனா, அமெரிக்காவுக்கு அடுத்த படியாக பெண்களுக்கான புற்றுநோய் பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இதனால் தினமும் 2 ஆயிரம் பெண்கள் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
புதுடெல்லி:

உயிர்க்கொல்லி நோயான புற்று நோய் பெரும்பாலும் ஆண்களை காட்டிலும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. உலக அளவில் சீனா மற்றும் அமெரிக்காவில் தான் பெண்கள் அதிக அளவில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர்.

தற்போதைய கணக்கெடுப்பின் படி சீனா, அமெரிக்காவுக்கு அடுத்த படியாக பெண்களுக்கான புற்றுநோய் பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. 2017-ம் ஆண்டின் கணக்கெடுப்பு படி இந்தியாவில் 7 லட்சம் பெண்கள் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். உண்மையில் அது 10 லட்சம் முதல் 14 லட்சமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏனெனில் பலருக்கு இந்நோய் கண்டு பிடிக்கப்படாமலேயே அல்லது கணக்கில் சேர்க்கப்படாமலேயே இருக்கலாம்.

இன்றைய கணக்குப்படி இந்தியாவில் தினமும் 2 ஆயிரம் பெண்கள் புற்றுநோய் பரிசோதனைக்காக வருகின்றனர். அவர்களில் 1200 பேருக்கு இறுதி கட்ட நிலையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் 5 ஆண்டு மட்டுமே உயிர் வாழக்கூடிய நிலையில் உள்ளனர். இவர்களுக்கு மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. மேலும் இத்தகைய புற்று நோய்களால் உயிரிழப்பவர்கள் மற்ற புற்று நோய்களை விட 1.6 முதல் 1.7 மடங்கு அதிக அளவில் உள்ளனர்.

இதற்கு கடைசி நேரத்தில் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுவதும், சிகிச்சைக்கான செலவும் மிக அதிக அளவில் இருப்பதுமே காரணமாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News