செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உ.பி.யில் நாளை சுற்றுப்பயணம்

Published On 2017-09-13 13:32 GMT   |   Update On 2017-09-13 13:32 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லக்னோ:

ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், பதவியேற்ற பின்னர் முதல் முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு நாளை முதல் 2 நாள்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.  

டெல்லியில் இருந்து நாளை விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் புறப்படும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சவுத்ரி சரண்சிங் சர்வதேச விமான நிலையத்துக்கு மதியம் 3 மணிக்கு வந்தடைவார்.

விமான நிலையத்தில் மாநில கவர்னர் ராம்நாயக், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் சில மந்திரிகள் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.

கான்பூரில் சுமார் 1,500 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். அதன்பின்னர் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தனது வீட்டில் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார். கான்பூர் விழாவை முடித்துவிட்டு அவர் தனி விமானம் மூலம் வெள்ளிக்கிழமை டெல்லி திரும்புகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது சொந்த கிராமத்துக்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News