செய்திகள்

மாணவி அனிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல்

Published On 2017-09-05 21:02 GMT   |   Update On 2017-09-05 21:02 GMT
மாணவி அனிதா தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் நேற்று ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் அவர் கூறி இருப்பதாவது:-

அரசியல் காரணங்களுக்காக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் மாணவர்களை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.

இது போன்ற தூண்டுதல் காரணமாகவே மாணவி அனிதா தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்று கருத முடிகிறது.

எனவே மாணவி அனிதா தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற சட்டவிரோதமான போராட்டங்களுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கக் கோருமாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் இன்று (புதன்கிழமை) முறையீடு செய்யப்போவதாக வக்கீல் ஜி.எஸ்.மணி தெரிவித்தார். 
Tags:    

Similar News