செய்திகள்

தெலுங்கானா கூடுதல் டி.ஜி.பி. உள்ளிட்ட பெண் போலீசாரிடம் போனில் கொஞ்சிய ஆசாமி கைது

Published On 2017-09-04 15:54 GMT   |   Update On 2017-09-04 15:54 GMT
தெலுங்கானா மாநில கூடுதல் டி.ஜி.பி. உள்ளிட்ட பெண் போலீசாரிடம் போனில் கொஞ்சிய ஆசாமியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
போபால்:

தெலுங்கானா மாநில காவல் துறையில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு கடந்த சில மாதங்களாக தினமும் இரவில் அனாமதேய போன் கால் வந்தது. அதில் பேசிய நபர், பெண் போலீசார் என தெரிந்தும் அவர்களிடம் கொஞ்சி பேசி வந்தார். முதலில் இது யாரோ மனநலம் பாதிக்கப்பட்டவரின் செயல் என போலீசார் நினைத்தனர். ஆனா, இந்த போன்கால் பல மாதங்களாக தொடர்ந்தது.

இதுகுறித்து எந்த பெண் போலீசாரும் வெளியே சொல்லாத தைரியத்தில் அந்த நபர் தினமும் பெண் போலீசாருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில், அவரது தொல்லையை தாங்க முடியாத பெண் போலீஸ் ஒருவர் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அவர்கள் இதுதொடர்பாக ரகசியமாக விசாரணையை தொடங்கினர்.

அதில், மத்தியபிரதேசம் மாநிலம் மொரேனா நகரின் சப்ஜிமண்டி பகுதியை சேர்ந்த துர்கேஷ் அகர்வால் (32), என்பவர் தான் இரவில் போனில் தொல்லை கொடுப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, ம.பி.க்கு சென்ற போலீசார் துர்கேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர்.



அவரது போன் கால்களை ஆய்வு செய்ததில்,
கடந்த ஜனவரி முதல் கூடுதல் டி.ஜி.பி. உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பெண் போலீஸ் அதிகாரிகளிடம் அகர்வால் போனில் பேசி தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

விசாரணையில் அகர்வால் கூறியதாவது:

இன்டர்நெட்டில் தேடி தெலுங்கானா மாநில பெண் போலீசாரின் போன் நம்பரை சேகரித்து வந்தேன். அதை வைத்து தினமும் ஒரு நம்பரில் போன் செய்து பேசுவேன். வேறு மாநிலமாக இருப்பதால் என்னை பிடிக்க முடியாது என நினைத்திருந்தேன். ஆனால் போலீசார் உரிய விசாரணை நடத்தி எனது முகவரியை கண்டறிந்து கைது செய்துள்ளனர் என தெரிவித்துள்ளான்.

பெண் போலீசாரிடம் அகர்வால் போனில் பேசி தொல்லை கொடுத்துள்ளது தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News