செய்திகள்

பிரம்மபுத்திரா நதியில் புதிதாக அணை கட்ட இந்தியா முடிவு

Published On 2017-08-23 17:07 GMT   |   Update On 2017-08-23 17:07 GMT
வடகிழக்கு மாநிலங்கள் வழியாக பாயும் பிரம்மபுத்திரா நதியில் புதிய அணை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

வடகிழக்கு மாநிலங்கள் வழியாக பாயும் பிரம்மபுத்திரா நதியில் புதிய அணை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி தெரிவித்துள்ளார்.

சீனாவில் உற்பத்தியாகி இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசம், அசாம் மாநிலங்கள் வழியாக வங்காளதேசம் சென்று கடலில் கலக்கும் பிரம்மபுத்திரா நதியானது, வடகிழக்கு மாநிலங்களின் பெரும்பான்மையான நீர் தேவையை பூர்த்தி செய்கிறது.



கனமழை நேரத்தில் நதியில் அதிகமான நீர் செல்லும் போது, போதிய அணைகள் இல்லாத காரணத்தால் வீனாக சென்று கடலில் கலக்கின்றது. சமீபத்தில் பிரம்மபுத்திரா நதியிலிருந்து இந்தாண்டுக்கு தேவையான நீரை அளிக்க முடியாது என சீனா கைவிரித்து விட்டது.

இந்நிலையில், அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் செல்லும் பிரம்மபுத்திரா நதியில் புதிதாக அணை கட்டப்படும் எனவும், அதன் மூலம் மின் திட்டங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News