செய்திகள்

டேராடூன் பள்ளியில் ராகுல் காந்தி - மாணவர்களுடன் கலந்துரையாடல்

Published On 2017-08-18 13:42 GMT   |   Update On 2017-08-18 13:42 GMT
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி முன்னர் பயின்ற டேராடூன் பள்ளிக்கு இன்று சென்றார். அங்கு பயிலும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடந்த 1881-83 ஆண்டுகளுக்கு இடையில் தனது இளம்வயதில் டேராடூனில் உள்ள உறவிடப் பள்ளியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டேராடூன் நகருக்கு இன்று ராகுல் காந்தி வந்தார்.

இங்குள்ள டூன் பள்ளிக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு தங்கி படித்துவரும் மாணவ-மாணவியரை சந்தித்து கலந்துரையாடினார். ராகுல் காந்தியுடன் அவரது தங்கை பிரியங்காவும் வந்திருந்தார். மாணவர்களுடன் இருக்கும் படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்த ராகுல் காந்தி, இந்த சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News