செய்திகள்

இந்தியாவில் 24 ஆயிரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர்களாக பதிவு

Published On 2017-08-14 00:14 GMT   |   Update On 2017-08-14 00:14 GMT
வெளிநாடுகளில் வாழ்கிற லட்சக்கணக்கான இந்தியர்களில் 24 ஆயிரம் பேர் மட்டுமே, இங்கு வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:

வெளிநாடுகளில் வாழ்கிற லட்சக்கணக்கான இந்தியர்களில் 24 ஆயிரம் பேர் மட்டுமே, இங்கு வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துள்ளனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதற்கு தேர்தல் கமிஷன், தனது இணையதளத்தில் வசதி செய்து தந்துள்ளது.

இந்த இணையதளத்தின் தகவல்படி, மிகச்சரியாக 24 ஆயிரத்து 348 வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.



அவர்களில் 23 ஆயிரத்து 556 பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். பஞ்சாப்பை சேர்ந்த 364 பேரும், குஜராத்தை சேர்ந்த 14 பேரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டவர்களில் அடங்குவார்கள்.

வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு, அந்த நாடுகளின் குடியுரிமையை பெறாமல் இந்திய குடியுரிமையை கொண்டிருப்பவர்கள் இங்கு வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News