என் மலர்

  நீங்கள் தேடியது "registered"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
  • முழுவதும் தடை மீறி மது விற்றதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 570 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  ஈரோடு:

  சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு போலீசார் ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

  இதில் மாவட்டம் முழுவதும் தடை மீறி மது விற்றதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 570 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக கவுந்தப்பாடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் 123 மது பாட்டிலுடன் சென்ற கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த வேலு (36), கோபியைச் சேர்ந்த கவுதம் (24), திங்கள் உரைச் சேர்ந்த கார்த்தி (26) உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் பிஷப்பால் வன்புணர்வு செய்யப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைப்படைத்தை வெளியிட்ட மிஷனரீஸ் ஆப் ஜீசஸ் என்ற அமைப்பின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Kerala #KeralaNun
  திருவனந்தபுரம்:

  கேரளாவில் செயல்படும் சீரோ மலபார் சபையின் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோட்டயம் குருவிலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். பி‌ஷப்  பிராங்கோ முல்லக்கல் கோட்டயத்திற்கு வந்தபோது தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிஷப்பை இன்னும் கைது செய்யவில்லை. இதனால் கன்னியாஸ்திரிகள் இணைந்து அவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும், கூட்டு கிறிஸ்தவ கவுன்சிலின் உறுப்பினர் ஸ்டீபன் மேத்யூ, பிஷப்பை கைது செய்ய வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். 8 நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த உண்ணாவிரதப்போராட்டம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.  இந்நிலையில், சமீபத்தில் பிஷப்புக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட மிஷனரீஸ் ஆப் ஜீசஸ் என்ற அமைப்பு, பாதிப்புக்குள்ளான கன்னியாஸ்திரியின் புகைப்படத்தையும் வெளியிட்டது. இந்த செயல் பலரது கண்டனங்களுக்கு உள்ளானது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின், மிஷனரீஸ் ஆப் ஜீசஸ் அமைப்பின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த கோட்டையம் எஸ்.பி.ஹரிசங்கர், 19-ம் தேதி நேரில் ஆஜராகும்படி பிஷப்புக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #Kerala #KeralaNun 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் நல்வாழ்வு மையங்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி நேற்று உத்தரவிட்டார். #ChildCare #Registered #ManekaGandhi
  புதுடெல்லி:

  அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ நிறுவனம், ஜார்கண்ட் மாநிலத்தில் நடத்தி வரும் குழந்தைகள் மையம், தத்தெடுப்பு என்ற பெயரில் 3 குழந்தைகளை பணத்துக்கு விற்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.

  இதனை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் நல்வாழ்வு மையங்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி நேற்று உத்தரவிட்டார்.

  அத்துடன், குழந்தைகள் தத்தெடுப்புக்கென தேசிய அளவில் செயல்படும் உயரிய அமைப்பான ‘காரா’வில் அனைத்து மையங்களும் ஒரு மாதத்துக்குள் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். 
  ×