செய்திகள்

அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட நாங்களும் ஆட்சி அமைக்க கோருவோம்: களத்தில் குதித்த லாலு மகன்

Published On 2017-07-26 21:52 GMT   |   Update On 2017-07-26 21:52 GMT
சட்டசபையில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட தாங்களும் ஆட்சி அமைக்க கோருவோம் என்று லாலு பிரசாத் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
பாட்னா:

பீகாரில் ஆட்சி அமைத்திருந்த மெகா கூட்டணியில் பூசல் வசூலித்ததை அடுத்து, முதல்வர் நிதிஷ்குமார் நேற்று அதிரடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ்குமாருக்கு பா.ஜ.க. நேரில் ஆதரவு தெரிவித்தது. 

மேலும், பாட்னா நகரில் நடைபெற்ற பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார். பா.ஜ.க. சார்பில் ஆளுநருக்கு ஆதரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்ந்இலையில், சட்டசபையில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட தாங்களும் ஆட்சி அமைக்க கோருவோம் என்று லாலு பிரசாத் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேஜஸ்வி தனது டுவிட்டர் தளத்தில், “ஆளுநரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளோம். பெரிய கட்சியான நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோருவோம். ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் நாங்கள் பெறுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிரடியான திருப்பங்களால், பீகார் அரசியல் இன்று மிகுந்த பரபரப்போடு தான் காணப்படும். யார் அமைக்க போகிறார்கள் என்பது மாலைக்குள் தெரிந்து விடும்.
Tags:    

Similar News