என் மலர்
நீங்கள் தேடியது "Bihar"
- மகனின் இறந்த உடலை வாங்க பெற்றோர் பிச்சை எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
- காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இறந்தவரின் உடல், 72 மணி நேரத்திற்கு தரப்படாது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் சமஸ்டிபூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் தாக்கூர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போனார். பின் அவர் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் அப்பகுதியில் உள்ள சதார் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் பெற்றோருக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து மகேஷ் தாக்கூர் இறந்த மகனின் உடலை வாங்க தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார்.
ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் 50,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. வறுமையில் வாடும் பெற்றோர், ரூ.50,000 லஞ்சம் கொடுக்க பணமில்லாமல் தெரு தெருவாக பிச்சை எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் யாரும் லஞ்சம் கேட்கவில்லை என மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி வினய் குமார் ராய் கூறுகையில்,
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்றது. இறந்த நபரின் உடல் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 72 மணி நேரம் வரை இறந்தவரின் உடல் தரப்படாது. பெற்றோர் மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டபோது, அங்கிருந்த அதிகாரிகள் நீங்கள் ரூ.50,000 லஞ்சம் கொடுத்தாலும் உடலை எடுத்து செல்ல முடியாது என கூறியுள்ளனர். இந்த வார்த்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. இதனால் மருத்துவமனை மீது தவறு இல்லை.
இவ்வாறு மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 18,23,29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பயங்கரவாதத்தினை உருவாக்கும் அனைவரும் இந்த காவலாளிக்கு எதிராக இருக்கிறார்கள். குற்றங்கள் புரிந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று ஜாமீன் கேட்பவர்கள், இந்த உறுதியான அரசினை கண்டு அஞ்சுகின்றனர். எதிர்க்கட்சியினர் அவர்களின் வெற்றிக்காக பாடுபடவில்லை, தங்களின் குறைந்த செல்வாக்கை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். #PMModi #PublicRally
பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 18,23 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்று மொத்தம் 3 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடந்து முடிந்த 3 கட்ட வாக்குப்பதிவுகளின் நிலை, பாஜகவிற்கு சாதகமாக உள்ளதை நினைத்து எதிர்கட்சியான காங்கிரஸ் நடுங்கிக் கொண்டிருக்கிறது. மகா கூட்டணியில் இருப்பவர்கள், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது எனவும், பாலக்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டும் வருகின்றனர்.
பீகாரின் முதல் மந்திரி நிதீஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் ஆகியோர் மிகச்சிறிய கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கினர். இதனால் அவர்கள் மாநிலத்தையே ஒளிபெறச் செய்தனர்.
மக்களே, ஓய்வெடுங்கள். பயங்கரவாதிகளை ஒழிக்க உங்கள் காவலாளியாகிய நான் இருக்கிறேன். மகா கூட்டணியில் இருப்பவர்களுக்கு பயங்கரவாதிகள் குறித்த கவலை இல்லை. ஆனால் புதிய இந்தியா பயங்கரவாதிகளை ஒழிக்க பாடுபடும். நீங்கள் பாஜகவினருக்கோ, அதன் கூட்டணி கட்சியினருக்கோ வாக்களிக்கிறீர்கள் என்றால், உங்கள் காவலாளிக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LokSabhaElections2019
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜனதா மூத்த தலைவரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான சுஷில் குமார் மோடி, பாட்னாவில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:-
ராகுல் காந்தி கடந்த 13-ந் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் பேசுகையில், “மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்கள்” என்றார். இதன்மூலம், சமூகத்தில் எனது நற்பெயரை களங்கப்படுத்தி விட்டார். இது ஒரு குற்றச்செயல். ஆகவே, அவருக்கு சம்மன் அனுப்ப வேண்டும். அதன்மூலம், வழக்கின் முடிவில் அவர் தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #SushilKumarModi
பீகார் மாநிலம், பெகுசாராய் பாராளுமன்ற தொகுதியில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் (வயது 32) போட்டியிடுகிறார்.
இவர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக தேசத்துரோக வழக்கில் சிக்கியவர். இவர் பெகுசாராய் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த அறிவிப்பை டெல்லியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் கே. நாராயணா வெளியிட்டு நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்துபரிஷத் ஆகிய அமைப்புகள் சாதி, இனம் அடிப்படையில் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றன என்பதை வெளிப்படுத்த கடுமையாக உழைத்தவர் கன்னையா குமார். நாட்டில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான அரசியல் முகமாக அவர் ஆகி உள்ளார்” என கூறினார்.
பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள பார்ஹ் பாக்தியார்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை ஆட்டோ ஒன்று பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து ஆட்டோவின் மீது சற்றும் எதிர்பாராத விதமாக மோதியது.
இவ்விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #BiharAccident
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கொண்டுள்ள பீகார் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு ஆளும் கட்சியாக உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், பாரதீய ஜனதா கட்சியும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்த கூட்டணிக்கு சரியான போட்டியை ஏற்படுத்துகிற விதத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக்சமதா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது), விகாஷீல் இன்சான் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்த கட்சிகள் இடையே நேற்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
மொத்தம் உள்ள 40 இடங்களில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் தரப்பட்டுள்ளன.
உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக்சமதா கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜித்தன் ராம்மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது) கட்சிக்கு 3 தொகுதிகளும், முகேஷ் சானியின் விகாஷீல் இன்சான் கட்சிக்கு 3 இடங்களும் தரப்பட்டுள்ளன.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டு) கட்சிக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தனது தொகுதிகளில் இருந்து ஒரு தொகுதியை ஒதுக்கித்தருகிறது.
காங்கிரசுக்கு மாநிலங்களவை இடம் ஒன்றும் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி சின்னத்தில் போட்டியிடுவார். தேர்தலுக்கு பின்னர் அவர் தனது லோக்தந்திரிக் ஜனதாதளம் கட்சியை ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் இணைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இடது சாரி கட்சிகளுக்கு இந்த கூட்டணியில் இடம் தரப்படவில்லை. இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி கூறி உள்ளார்.