செய்திகள்

இஸ்ரோ முன்னாள் தலைவர் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

Published On 2017-07-24 03:38 GMT   |   Update On 2017-07-24 05:04 GMT
இஸ்ரோ முன்னாள் தலைவரும், விஞ்ஞானியுமான உடுப்பி ராமச்சந்திர ராவ் பெங்களூரில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இஸ்ரோ முன்னாள் தலைவரும், விஞ்ஞானியுமான உடுப்பி ராமச்சந்திர ராவ் பெங்களூரில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் உடுப்பி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திர ராவ் (85). விஞ்ஞானியான இவர் இஸ்ரோவில் சேர்ந்து பணியாற்றி வந்தவர்.
இவர் 1984 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் தலைவராக இருந்தார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியப்பட்டா ஏவுவதற்கான பணிகளில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில், பெங்களூரில் வசித்து வந்த ராமச்சந்திர ராவ், இன்று காலை காலமானார்.



இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், பிரபல விஞ்ஞானியான ராமச்சந்திர ராவ் மரணம் மிகவும் துயரகரமானது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையில் ராமச்சந்திர ராவ் ஆற்றிய பணிகளை என்றும் மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News